பேஜார் பீடியா: கருங்காலி மாலை

பேஜார் பீடியா: கருங்காலி மாலை
Updated on
1 min read

பெயர்: கருங்காலி மாலை

வயது: வயது வித்தியாசம் இல்லாமல் கழுத்தை அலங்கரிக்கும் வயது

நண்பர்கள்: சோஷியல் மீடியாவில் ஃப்ரீயாக விளம்பரம் கொடுப்பவர்கள்

எதிரிகள்: டூப்ளிகேட் கருங்காலியைத் தயாரிப்பவர்கள்

பிடித்தது: டி.வி., யூடியூப் ஸ்பெஷல் விளம்பரங்களில் தன்னைப் பற்றி பில்டப் கொடுப்பது

பிடிக்காதது: மாலை அணிந்து பிரச்சினையில் சிக்கியவர்களை வசமாகக் கலாய்ப்பது

தெரிந்தது: வயது வாரியாகவும் சைஸ் வாரியாகவும் பெரியபெரிய கடைகளில் விற்பனை செய்வது

தெரியாதது: நடைபாதைக் கடைகளில் நாற்பது ரூபாய்க்கு நான்கு மாலை கிடைப்பது

விரும்புவது: தமிழ்நாட்டின் மரமான பனை மரத்தைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு பாப்புலராவது

விரும்பாதது: மீம்ஸ் போட்டு கலாய்ப்பது

ஒரே எரிச்சல்: கருவேல மரத்துக்கும் கருங்காலி மரத்துக்கும் வித்தியாசம் தெரியாதது

தற்போதைய இலக்கு: எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று சித்தம் கலங்கியவர்களை வாங்க வைப்பது

எதிர்கால இலக்கு: உள்ளூர் ஆண்டியப்பன் முதல் உலக அர்னால்ட் வரை அனைவரையும் வாங்க வைப்பது

தற்போதைய சாதனை: பிரபலங்களின் கழுத்தில் பிரதானமாக இருப்பது

நீண்டகால வேதனை: ‘அடேய்! கருங்காலி பயலே’ என்று தன்னைச் சம்மந்தப்படுத்தி திட்டுவது

- சோக்காலி

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in