

எந்த ஒரு இசைக் கச்சேரி நிகழ்ச்சியும் சந்திக்காத விமர்சனங்களை, சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்?’ இசைக் கச்சேரி நிகழ்ச்சி பெற்றுவிட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் மனக்குமுறல்கள் இந்த வாரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன.
இனி எந்தவொரு இசையமைப்பாளரும் இசைக் கச்சேரியை நடத்தினால், ‘மறக்குமா நெஞ்சம்?’ நிச்சயம் நினைவுக்கு வராமல் போகாது. இசை ரசிகர்களின் மனக்குமுறல்கள் இந்தக் கச்சேரியின் மூலம் வெளிப்பட்டிருந்தாலும் பகடியான மீம்களும் சமூக வலைதளங்களில் வழக்கம்போல வலம் வந்தன.