

இ
ங்கிலாந்தில் இளைஞர்களின் விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று ‘உலக பிளாக் புட்டிங் சாம்பியன்ஷிப்’. கறுப்புப் பந்துகளை மேலே எறிந்து ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைக்கும் விநோதமான விளையாட்டு இது.
ராம்ஸ்பாட்டம் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான போட்டியாளர்கள் குவிந்துவிடுவார்கள். குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்.
போட்டி இதுதான். இருபது அடி உயரத்தில் ஒரு தட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் 5 ரொட்டித் துண்டுகள் இருக்கும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த வாய்ப்புகளில் போட்டியாளர்கள் கறுப்பு பந்தை மேலே எறிந்து, ரொட்டித் துண்டுகளை கீழே விழ வைக்க வேண்டும். ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைப்பவரே வெற்றியாளர். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் இந்தப் போட்டி நடைபெறுவது வாடிக்கை.
இந்த விநோதமானப் போட்டி இங்கிலாந்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. பழமையான போட்டியாக இருந்தாலும், விநோதமாக இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டுக்கு தனி மவுசுதான்.