கீரிப்புள்ள தலைகள்!

கீரிப்புள்ள தலைகள்!
Updated on
1 min read

மொ

ஹாக் (mohawk) ஸ்டைல் தெரியுமா? ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் செந்தில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வருவார். அதைப் பார்க்கும் கவுண்டமணி, “அது என்னடா தலையில கீரிப்புள்ள படுத்திருக்கு"ன்னு முடியைத் தடவிப் பார்த்து நக்கல் செய்வாரே, அந்த ஸ்டைலுக்குப் பெயர்தான் மொஹாக்.

தலையின் இரு புறங்களிலும் முடியை மழித்துவிட்டு, முன்பக்கத்திலிருந்து பின்பக்க மண்டை வரைக்கும் நடுவில் மட்டுமே ஹேர் ஸ்டைல் இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இளைஞர்களுக்குப் பிடித்த ஹேர்ஸ்டைல் இதுதான். ஆண்கள் இந்த ஹேர்ஸ்டைல் கெட்டப்பில் வலம் வருவதைப் பார்த்து இளம் பெண்கள் சும்மா இருப்பார்களா? அவர்களும் இப்போது மொஹாக் ஹேர்ஸ்டைலுக்கு மாறிவருகிறார்கள். பெண்களுக்காக மட்டும் மெஹாக் ஸ்டைலில் 70 ரக கெட்டப்புகள் இருக்கின்றனவாம். சில கெட்டப்புகளை நீங்களே பாருங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in