புதுமை விளையாட்டு

புதுமை விளையாட்டு
Updated on
1 min read

சி

றார்களும் இளைஞர்களும் விரும்பி விளையாடும் ரூபிக் க்யூப் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு அது. அதைப் போலவே ஒரு விளையாட்டு பிரபலமாகிவருகிறது. ஐக்யூவை வளர்க்க உதவும் அந்த விளையாட்டின் பெயர் ‘ட்ரைடோ மேக்னடிக் பில்டிங் பொம்மை’.

பிளடோனிக் முறையில் உருவான விளையாட்டு இது. இந்த விளையாட்டில், காந்தத்தன்மைக் கொண்ட ஒவ்வொரு பக்கமும் மற்றொரு பக்கத்தை ஈர்த்துக்கொள்ளும். இதை வைத்து விரும்பிய உருவத்தையோ கட்டமைப்பையோ உருவாக்கலாம். இதுதான் இந்த விளையாட்டின் ஸ்பெஷல்.

கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுவதில் தொடங்கி மன அழுத்தத்தை குறைப்பதுவரை ட்ரைடோ ஓர் ஆயுதமாகவும் உள்ளதாம். பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ட்ரைடோவின் விலை சுமார் 2,000 ரூபாய்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in