

திருமணம் முடிந்த கையோடு மணக் கோலத்தில் தேர்வு எழுதுவதுதான் மணமகள்களின் இப்போதைய டிரெண்ட் என்றாகிவிட்டது. தேர்வு அறைக்கு வந்து வழி அனுப்பிவைத்து வாசலில் காத்துக்கிடக்கிறார்கள் மணமகன்கள். சில ஆண்டுகள் முன்புவரை பாராட்டப்பட்ட இச்செயல், இப்போது ‘முடியலடா சாமி’ என்ற அளவுக்கு மாறிவிட்டது. இதை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் நக்கல் அடிக்கத் தொடங்கிவிட்டனர். இணையத்தில் மீம்கள் வரிசைகட்டுகின்றன.
‘கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்தவராக இருந்தால் தேர்வுக்குப் பிறகு கல்யாணம் வைக்கலாமே?’, 'அந்த மாலையைக்கூட கழற்றிவைக்க நேரமில்லையா?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்கள். 'இந்த அக்கப்போருக்கு ஒரு முடிவே இல்லையா?’ என்றும் நெட்டிசன்களின் அலப்பறைகள் தொடர்கின்றன.