

எ
திர்காலத்தில் கார்கள் எப்படி இருக்கும் என்ற கேட்டால், தரையிலிருந்து அப்படியே மேலே பறக்கும் என்றுகூட பதில் வரலாம். சக்கரம் இல்லாமல் கார்கள் வரும் என்று யாரும் நிச்சயம் சொல்லமாட்டார்கள். ஆனால், சீனாவைச் சேர்ந்த யூஜென் கய் என்ற இளம் பெண், சக்கரம் இல்லாமல் காந்த சக்தியை மட்டுமே கொண்டு இயங்கும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த காருக்கு சர்வதேச அளவில் வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
புதுமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ள சக்கரமே இல்லாத இந்த காரை திருப்பாமலேயே எந்தத் திசையில் வேண்டுமானாலும் ஓட்டலாம். சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்தபடி வாகனத்தை எந்த திசையிலும் கட்டுப்படுத்தலாம். அது மட்டுமல்ல, ஒரு சிறிய கேபினை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் எத்தனை கேபின்களை வேண்டுமானாலும் இணைக்கலாம். ஒரு கேபினிலிருந்து இன்னொரு கேபினில் உள்ளவருடன் ஸ்பீக்கர் வழியாக பேசவும் செய்யலாம்.
“இதனை டாக்சியாக உலகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்கிறார் இந்த காரை உருவாக்கிய யூசென் கய்.