இணைய கலாட்டா: பிஸ்கெட் பரிகாரம்

இணைய கலாட்டா: பிஸ்கெட் பரிகாரம்
Updated on
1 min read

வெள்ளிக்கிழமை காலை எழுந்தவுடன் ‘குட் டே’ பிஸ்கட்டை சாப்பிட்டால் சந்திராஷ்டமம் தூர ஓடிவிடும் என்று பரிகாரம் கூறி யூடியூபில் குபீர் அலையை ஏற்படுத்தியிருக்கிறார் ஒரு ஜோசியர். அதேபோல ‘பாஸ் பாஸ்’ சுவிங்கத்தைத் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தால், பாசிட்டிவ் சார்ஜ் உண்டாகி, அது தலையணை வழியாக தலைக்கேறி, பரீட்சையில் ஜெயத்தை உண்டாக்கும் என்றும் கூறி அதிர வைத்திருக்கிறார் அவர்.

செவ்வாக்கிழமையில் பிறந்தவர்கள் காவல்நிலையம் அருகே உள்ள டீக்கடையில் பாய்லர் டீயுடன் பருப்பு வடையும் சேர்த்து சாப்பிட்டால் தோஷம் நீங்கும் என்றும் ஜாதகத்தில் சந்திரன் அஷ்டமத்தில் இருந்தால் மொபைல் போனில் ஒரு செல்ஃபி எடுத்து அதை உடனே அழித்துவிட்டால் பாதிப்புகள் விலகும் என்றும் பரிகாரங்கள் பட்டியல் நீள்கிறது. அதை இணையவாசிகள் கண்டபடி ட்ரால் செய்திருக்கிறார்கள். ‘கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்’ என்றுதானே நீங்களும் கேட்கிறீர்கள்? இப்படியெல்லாம் பரிகாசம் பண்ணா எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நடிகர் யோகி பாபுவுக்கு தன் கையெழுத்திட்ட ஒரு பேட்டைப் பரிசாக அனுப்பிவைத்துள்ளார். தோனி அனுப்பிய பேட்டை உறையிலிருந்து வெளியே எடுக்கும் காணொளியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் யோகி பாபு. இது ஹார்ட்டின்களை அள்ளுகிறது.

காணொளியைக் காண: http://bitly.ws/Gpfk

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in