அடித்துத் துவைக்கப்பட்ட நாவல்! | சுட்ட கதை 35

அடித்துத் துவைக்கப்பட்ட நாவல்! | சுட்ட கதை 35
Updated on
4 min read

அவ்வளவு எளிதில் அடையாளம் காணமுடியாதபடி, அந்தரங்கமாகச் செயல்படும் மனிதர்களை ‘எக்ஸ்’ (X) என்கிறோம். கணிதப் பாடத்தில் மண்டையை உடைக்கும் ஒரு ‘எக்ஸ்’ உண்டு. எலான் மஸ்க்கின் ‘எக்ஸ்' சமூகவலைத்தளம் இல்லாமல், இன்றைய நவீன உலகம் இல்லை.

இத்தனை ‘எக்ஸ்’களுக்கு மத்தியில் உலகில் பல மொழி சினிமா இயக்குநர்களுக்குப் பிடித்தமான ஒரு ‘எக்ஸ்’ உண்டு. ஜப்பானிய எழுத்தாளர் கீகோ ஹிகாஷினோ எழுதி, 2005இல் வெளிவந்த ‘The Devotion of Suspect X' ஒரு துப்பறியும் நாவல்.

அந்த எழுத்தாளரோ அல்லது அதை விரும்பி வாசித்துக் கொண் டாடிய ஜப்பானியர்களோகூட இந்த நாவல் திரையுலகில் இவ்வளவு பெரிய வட்டமடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

டோக்கியோவில் தொடங்கி சியோல், பெய்ஜிங், காலிம்பாங், ஏன் நம் கேரளம், தமிழகம், ஹாலிவுட்வரை இந்த நாவலை அச்சு அசலாக அப்படியே எடுத்தாண்டும், விதவிதமாக மாற்றியும் வணிக சினிமாக்காரர்கள் அதை அடித்துத்துவைத்துத் தொங்கப்போட்டு விட்டார்கள். துணி வெளுப்பவர்கள் கூட ஒரு சட்டையை இத்தனை முறை துவைப்பார்களா என்பது சந்தேகமே!

நாவலைத் தழுவி...

நாயகியைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறான் அவளது கணவன். ஒருகட்டத்தில் துன்புறுத்தல்களைத் தாங்க மாட்டாமல் அவனைக் கொன்றுவிடுகிறாள் நாயகி.

அவளின் பக்கத்து வீட்டுக்கார னுக்கு இது தெரிந்துவிடுகிறது. நாயகி நல்லவள் என்று அவனுக்குத் தெரியும்.

ஆனால், அந்தப் பெண் போலீசில் மாட்டாத அளவு ஆதாரங்களைத் தயார் செய்து, அவளுடைய கணவனின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தி, அவளைக் காப்பாற்றி விடுகிறான்.

ஆனால், போலீஸ்காரர் நாயகியின் பக்கத்து வீட்டுக்காரன் மீது சந்தேகம் அடைந்து துப்பறியத் தொடங்கினால் என்ன ஆகும்? இதுதான் 2008இல் மூலமொழியில் பதிப்பிக்கப்பட்ட நாவலின் அதிகார பூர்வ முதல் தழுவல் திரைப்படமாக வெளிவந்த ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ (Suspect X) படத்தின் கதையும். மூல நாவலின் திருப்பங்களை அப்படியே கையாண்டு இயக்கியிருந்ததால் பாக்ஸ் ஆபீஸிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஜப்பானி லிருந்து தென்கொரியாவுக்கு இது பயணப்பட்டது. அங்கே, பாங் யூன் ஜின் இயக்கத்தில் கொரிய மொழியில் ‘Yonguija X' (சந்தேக நபர் X) என்கிற தலைப்பிலும், ஆங்கில சப் டைட்டில்களுடன் ‘பெர்ஃபெக்ட் நம்பர்’ (Perfect Number) என்கிற தலைப்பிலும் தென் கொரியாவிலும் உலகச் சந்தையிலும் 2012இல் வெளியாகி பட்டையைக் கிளப்பியது.

இதுவும் உரிமை பெற்ற தழுவலே. அதற்கும் பின்னர் அலெக் சூ (Alec Su) இயக்கத்தில் சீன மொழியில் அசல் நாவலின் பெயரிலேயே உருவாகி 2017இல் வெளியாகி அங்கேயும் ஹிட்டடித்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in