

கடந்த 2006இல் வெளியான இந்திப் படம் ‘டாக்ஸி நம்பர் 9211’. அது, 2002இல் வெளியான ‘சேஞ்சிங் லேன்ஸ்’ (Chan ging Lanes ) என்கிற ஆங்கிலப் படத்திலிருந்து உருவப்பட்ட படம். அது தெரியாமல் அந்த இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி எடுக்கப்பட்ட தமிழ்ப் படமான - ‘TN 07 AL 4777’ 2009இல் வெளியாகி ரசிகர்களைக் கவர முடியவில்லை.
நீதிமன்றம் செல்லும் வழியில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின்றன. இரண்டிலும் பயணித்த இரண்டு முதன்மைக் கதாபாத் திரங்களுக்கும் நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வேலை நடந்தாக வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த விபத்தின் தாமதத்தால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் இருவருக்கும் எதிராகத் தீர்ப்பு கூறப்பட்டுவிடுகிறது. இதனால் கோபம் கொள்ளும் இருவரும் ஒருவருடன் மற்றவர்மோதி, இருவரின் வாழ்க்கை யையும் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கு மற்றவர் உதவிக்கொண்டு, தங்கள் பிரச்சினைகளைச் சரிசெய்து கொள்கி றார்கள். இதுதான் ‘சேஞ்சிங் லேன்ஸ்’ படத்தின் கதை.