

* மேடைப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் நடித்து இதுவரை மூன்று படங்கள் வெளிவந்திருக்கின்றன.
அவரது நடிப்பில் நான்காவதாக வெளியாக இருக்கும் படம் ‘டெலிவரி பாய்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இதுதான் உன்னுடைய முதல் படம்’ என்று பாராட்டியிருக்கிறார் லியோனி.
* இந்தப் படத்தை எழுதி, இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார் நானி. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், சுசீந்திரன் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படத்தின் திரைமொழியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரிடமே உதவி இயக்குநராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்றுள்ளார்.
* சென்னை எண்ணூர்ப் பகுதியில் நடக்கும் கதை. சிறுவயது முதல் பிரியாத நண்பர்களாக வளர்ந்து, பாதை தவறிய 7 இளைஞர்கள் ‘பாடல் கேங்க்’ என்கிற பெயரில் போலீஸுக்குக் கண்ணாமூச்சி காட்டும் கூலிப்படையாக வலம் வருகிறார்கள்.