ரஜினி கேங்: திரைப் பார்வை - பேயின் புதுமையான புகலிடம்!

ரஜினி கேங்: திரைப் பார்வை - பேயின் புதுமையான புகலிடம்!
Updated on
2 min read

போற்றுதலுக்குரிய (!) பி.வாசு தான் தமிழ் சினிமாவில் தாலி செண்டிமெண்ட் மசாலா படங்களின் மொத்தக் குத்தகைதாரர். அவர், தாலியைக் கைவிட்டு, ஆவி, அமானுஷ்யம் என்று போய்விட்டதாலோ என்னவோ, ‘தாலி + ஆவி’ என்கிற புதுவித ஃபார்முலாவை மண்டையைக் கசக்கி யோசித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரமேஷ் பாரதி. அவர் கண்டுபிடித்த ஃபார்முலாவில் சாதித்தாரா என்று பார்க்கலாம்.

பொதுவாகத் தமிழ் சினிமாவின் பேய்கள், பிரிட்டிஷ் காலத்து பங்களாக்கள், அரண்மனைகள், பாழடைந்த வீடுகள், காடுகள், மயானம் என்று மனிதர்களிடமிருந்து தப்பிக்க, பாதுகாப்பு தேடி பதுங்கியிருக்கும். வேலியில் போகும் ஓணானைத் தூக்கி மடியில் விட்டுக்கொண்ட கதையாக, ஆவியைத் தேடிப்போய் வம்புக்கு இழுப்பார்கள் நாயகனும் அவனது குழுவினரும். ஆணாதிக்க சமூகம் என்பதால் பெண் பேய்களின் பாபுலேஷன்தான் கோலிவுட் புராடெக்டுகளில் அதிகம். சரி போகட்டும்.. ‘ரஜினி கேங்’ ஆவிக்கு வருவோம்.

இதுவும் ஒரு இளம் பெண் பேய்தான். ஆனால், இது பங்களாவில் தங்குதற்கு பதிலாக ஒரு தாலியில் தங்கியிருக்கிறது.

கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் கலக்கின்றனர். இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ்.

இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வதைத் தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயல்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.

பேய் இருக்கும் தாலி எப்படி இவர்கள் கையில் சிக்கியது..? திவிகாவை விட்டு பேய் விரட்டியடித்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை

நாயகன் ரஜினி கிஷன் - த்விகா இருவரும் காதலர்கள். காதலைக் காப்பாற்றிக்கொள்ள, முனீஷ்காந்த் தலைமையிலான நண்பர்கள் கூட்டணியின் உதவியுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்தைத் தடுக்க முயல்கிறார் த்விகாவின் மாமாவான கூல் சுரேஷ்.

ஒருவழியாகத் திருமணம் முடிந்து நாயகன் பெருமூச்சுவிடுவதற்குப் பதிலாக மூச்சிரைக்க ஓட ஆரம்பிக்கிறார். காரணம், மனைவியின் தாலியில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணின் ஆவி அவரைத் துரத்துகிறது.

ஒரு கட்டத்தில் ஆவியிடம் நான்கு அடிகளை வாங்கிக்கொண்டு அதன் கண்ணீர்க் கதையைக் கேட்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது? மனைவியின் தாலியை விட்டு அது வெளியேறி வழிவிட்டதா, அதற்கும் அந்தப் பேய் ஆடிய ‘கேம்’ என்ன என்பது மீதிக் கதை.

ஆவிகள் பழி வாங்குவது புதிய களம் அல்ல; ஆனால் அதைத் தாலிக்குள் ஒளித்து வைத்தது, அதிலிருந்து அது எந்தச் சூழ்நிலையில் வெளியே வருகிறது, தாலி கட்டியவனை ஏன் தேடுகிறது என்பதையெல்லாம் ரசிக்கும்படியாக எழுதியிருக்கிறார் இயக்குநர்.

அதேபோல், ஆவியுடன் எப்போது நாயகனும் அவனுடைய காதலி, சகாக்கள்தான் மல்லுக்கட்டுவார்கள்! வில்லன்களையெல்லாம் ஒரே அடியில் கொன்று அவர்களுக்கு ‘வேல்யூ’ இல்லாமல் செய்துவிடுவதும் துயரமான வழக்கம்.

இதில் நாயகன் எதிர்கொள்ளும் ஆவித் துரத்தல் அட்ராசிட்டியில் முனிஷ்காந்தும் கல்கியும் பங்கெடுத்துக்கொள்வது நன்றாகவே எடுபட்டுள்ளது. அதேபோல், ஆவியே அதகளமான வில்லத்தனத்துடன் இருப்பதும் அது செய்யும் சேட்டைகளும் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை ஹாரர் வேட்டை.

ரஜினி கேங்: திரைப் பார்வை - பேயின் புதுமையான புகலிடம்!
The Family Man 3 Review: நிதானமும் வன்முறையும்... கிட்டியதா நிறைவான அனுபவம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in