பணத்தைக் கொட்டி பரப்புரை! | பொங்கல் சினிமா
தமிழ்நாட்டில் பொங்கல் என்றால் ஆந்திரம், தெலங்கானாவில் ‘பெத்த பண்டுகா’ என்கிற மகா சங்கராந்தி பண்டிகைதான் திரையரங்க வசூலுக்கான தங்கச் சுரங்கம். விஜயின் அரசியல் ஆக்ஷன் படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சிக்கல்களால் வெளியீடு தள்ளிப் போய்விட, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, இப்போது பிரபாஸின் ‘ராஜாசாப்’ படத்துடன் பொங்கல் வெளியீட்டில் களம் காண்கிறது.
1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சில நிகழ்வு களுடன் கற்பனை கலந்து உருவாக்கப் பட்டிருக்கும் ‘பராசக்தி’ படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகள் தொடக்கம் முதலே பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில், கடந்த டிசம்பர் 18 அன்று படத்தில் பயன்படுத்தப்பட்ட அரங்கப் பொருள் கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, 10 நிமிட முன்னோட்டக் காட்சியும் திரையிடப்பட்டது. அடுத்து ஜனவரி 3 அன்று இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினர்.
இப்போது ‘பராசக்தி’ படக்குழுவினர், தென்னிந் திய நகரங்களில் நடத்தப்படும் பரப்புரை நிகழ்ச்சிகளுக்குத் தனி விமானத்தில் பறந்துவருகின்றனர். படத்துக்கான பட்ஜெட்டில் 10 சதவீதத்தைப் பரப்புரைக்கே செலவு செய்யும் போக்கு, மாஸ் படங்களுக்கான பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விடுகிறது.
