பிரம்மாண்டத் தொடக்கம்! | திரை விழா

பிரம்மாண்டத் தொடக்கம்! | திரை விழா
Updated on
1 min read

‘இசை மேதை', 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றையும் அதில் அவர் ஐ.நா. மன்றம் வரை சென்று பாடிப் புகழ்பெற்ற கலைப் பயணத்தையும் தழுவித் தயாராகும் திரைப்படம் 'எம்.எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்’ (M.S. : A Legacy on Screen). இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வை உலக நாயகன் கமல்ஹாசன் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.

கடந்த 2019இல் வெளியாகி, சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதை வென்ற ‘ஜெர்சி’யை இயக்கிய கௌதம் தின்னனூரிதான் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் எம்.எஸ். சுப்பு லட்சுமியாக ‘நேஷனல் கிரஷ்' எனக் கொண்டாடப்பட்டுவரும் ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத் இசை யமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் - ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் - பென்னி பிலிம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பில் அல்லு அரவிந்த் - ராக்லைன் வெங்கடேஷ் - பென்னி வாசு இணைந்து தயாரிக்கிறார்கள்.

விழாவின் சிறப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி யின் இசை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாகத் திகழ்ந்த சென்னையின் ‘மியூசிக் அகாடமி’ அரங்கத்தில் தொடக்க விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமி - சதாசிவம் தம்பதியின் குடும்ப வாரிசுகள் பலர் கலந்துகொண்டனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in