

சர்வதேசப் படங்களுக்கான போட்டிப் பிரிவுடன், இந்தியாவின் பல மொழிப் படைப்புகளை அங்கீகரிக்கும் பெருமைமிகு ‘இந்தியன் பனோரமா’ பிரிவையும், இந்தியப் படங்களைச் சர்வதேச அரங்கில் விற்பனை செய்வதற்கான ‘பிலிம் பஸார்’ பிரிவையும் கொண்டுள்ள ஒரே சர்வதேசப் படவிழா, கோவாவில் மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா (IFFI - Goa). நடந்து முடிந்துள்ள அதன் 56வது பதிப்புக்கு, அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ் குறும்படம் ‘ஆநிரை’. திரையிடலுக்குப் பின் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் இ.வி.கணேஷ்பாபுவுடன் ஒரு மினி பேட்டி: