

வாடகை கார் ஓட்டுநர்களின் வலிகளைப் பேசும் ‘இயக்கி’ என்கிற தன்னுடைய குறும்படத்தையே விரித்து ‘ரேஜ்’ என்கிற முழுநீளப் படமாக எழுதியிருக்கிறார் சிவனேசன். அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
எதற்காக ‘ரேஜ்’ என்று ஆங்கிலத் தலைப்பு?
‘சீற்றம்’ என்று வைக்கலாம் என்றால் அது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தது. தவிர, தற்போதைய தலைமுறைக்குப் பழிவாங்கும் கதையைக் கொண்ட படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தால் பிடிக்கிறது. எந்த வம்பு தும்புக்கும் போகாத ஒரு சாமானிய மனிதனின் சீற்றம்தான் கதைக் களம்.