‘பச்சோந்தி’க்கே சவால்! | பலராம் கிருஷ்ணா - இப்படிக்கு இயக்குநர்

‘பச்சோந்தி’க்கே சவால்! | பலராம் கிருஷ்ணா - இப்படிக்கு இயக்குநர்
Updated on
2 min read

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரை யில் வளர்ந்து வரும் முகேன் ராவ் நாயக னாகவும் நிதின் சத்யா முதல் முறையாக வில்லனாகவும் நடித்துள்ள படம் ‘நிறம்’.

அப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார் பலராம் கிருஷ்ணா. பிரபல வி.எஃப்.எக்ஸ். இயக்குநர். திரைப்படங்கள், மெகா தொடர்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எனப் பல விதமான தயாரிப்புகளில் கிடைத்த அனுபவத்துடன் சினிமா இயக்கத்தில் அடியெடுத்து வைத் திருக்கும் அவருடன் உரையாடியதிலிருந்து..

Q

‘நிறம்’ என்கிற தலைப்பு கதையைப் பிரதிபலிக்கிறதா?

A

இல்லை, கதாபாத்திரங்களின் குணத்தை. அறிந்தவர், அறியாத வர், உறவுகள், நண்பர்கள் என நம்மோடு அன்றாடம் பயணிப்பவர்கள், எதிர் பாராமல் இணைந்து பயணிக்க வேண்டி வருபவர்கள் என இவர்களில் எல்லாரையும் வெள்ளந்தி மனிதர்கள் என்று சொல்லிவிட முடியாது.

தன்னைத் தற்காத்துக்கொள்ள எவ்வளவு நல்ல குணம் கொண்ட மனிதனும் காலையில் ஒரு முகம், மாலையில் ஒரு குணம், இரவு இன்னோர் உருவம் என நிறம் மாறும் போது வாழ்க்கைப் பல வேளைகளில் சூறாவளிஆகிவிடுகிறது.

நாயகன், நாயகி என்றால் சினிமா புனிதர்களைப் போலவே சித்தரித்து வந்திருக்கிறது. இத்திரைக்கதையில் அவர்களும் எப்படி நிறம் மாறுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். முதன்மைக் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, வில்லன், துணைக் கதாபாத்திரங்கள் வரை இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களிடம் பச்சோந்தியும் தோற்றுப்போகும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in