

பணம் படைத்தவன் | படம் உதவி: ஞானம் |
தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா வழியாகத் தமிழ் சினிமாவில் நாயக பிம்பம் வேர்பிடிக்கத் தொடங்கியது. இருவருமே திராவிட சினிமாவின் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அதன்பின், எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவரது எழுச்சி என்பது நட்சத்திரப் போட்டியாக மாறி நின்றபோது, திரையிலும் திரைக்கு வெளியிலும் வழிபாட்டுக்குரிய பிம்பங்களாக வரித்துக் கொள்ளப்பட்டார்கள்.
அவர்களை அவ்வாறு மாற்றியதன் பின்னணியில் திரைமொழியே முக்கியப் பங்கு வகித்தது. நாயக சினிமாவின் திரைமொழியில் முதன்மையானது, நாயகனை மையப் படுத்திய கதையோட்டம். இது, சினிமாவிலிருந்து தொடங்கியது அல்ல. கிறிஸ்து வுக்கும் முந்தைய வரலாறு உருவாக்கிய மனித ஆழ்மனத்தின் ஏக்கத்திலிருந்து பிறந்த எதிர்பார்ப்பு.