

வினோபா பாவே தொடங்கியது ‘பூமிதான இயக்கம்’. லாஃப்ட்டி என்கிற ‘உழுப வருக்கே நில உரிமை இயக்க’த்தை (Land for the Tillers' Freedom) தொடங்கியவர் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன். இந்த இரண்டு இயக்கங்கள் வழியாகவும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய விவசாயிகளுக்கு விளைநிலங்களைப் பெற்றுக்கொடுத் தவர் இன்று நூறாம் அகவையில் வாழ்ந்துகொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்.
அவருடைய இந்த மகத்தான சமூகப் பணியும் காந்தியச் செயல் பாடுகளும் தமிழக வரலாற்றில் ஒரு மகத்தான முன்மாதிரி. அவரைப் போல் சமூக வரலாற்றில் ஒரு கண்ணி யாகவே மாறிப் போனவர்களை, ‘நம்மிடமிருந்து வந்து நமக்காகவே வாழ்ந்தார்கள்’ என்பதை வெறும் செய்திப் படமாக அல்லாமல், ஓர் ஆவணப்படமாக உருவாக்கும் போது, மறந்து வரும் சமூகத் துக்கு நினைவூட்டவும் புதிய தலை முறைக்கு அறிமுகப்படுத்தவும் சிறந்த வழியாகிறது.
அதை, ‘நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்’ என்கிற தலைப்பில் சுவாரசியமும் கலாபூர்வமும் இணைந்த ஓர் ஆவணப்படமாக உருவாக்கி அளித்திருக்கிறார் இயக்குநர் ரவிசுப்பிரமணியன். எந்த ஒரு சமூகச் செயல்பாட்டா ளருக்கும் வீடும் உறவுமே பகை. வருமானமும் புகழும் மறைமுக ஆதாயங்களும் இருந்தால் வீடு அவர்களைக் கொண்டாடும்.
இல்லை யென்றால் அவர்களை முதலில் தவிக்கவிடுவதும் இவர்கள்தான். ஆனால், கிருஷ்ணம்மாளுக்கு அதிர்ஷ்டவசமாக அது நேரவில்லை. கணவர் ஜகந்நாதனும் இந்த லட்சியத் தம்பதியின் இரண்டு பிள்ளைகளும் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் பெற்றோருடன் சமூகப் பணியில் தங்களை இணைத்துக்கொண்டு, உடன் பயணித்து வந்திருக்கிறார் கள். பெற்றோர் விட்ட இடத்திலிருந்து பிள்ளைகள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.