கால வட்டமும் கதாபாத்திரங்களின் ஆட்டமும்! | சுட்ட கதை 24

கால வட்டமும் கதாபாத்திரங்களின் ஆட்டமும்! | சுட்ட கதை 24
Updated on
2 min read

ஆஸ்கர் விருது வாங்கிய ஒரு குறும்படத்தின் அதே கதை, ஆச்சரியகர மாக ஒரு தமிழ்ப் படத்தில் இடம் பெற்றதைப் பற்றிப் பார்ப்போம். ‘டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two Distant Strangers) என்கிற அரை மணி நேரக் குறும்படம் நவம்பர் 2020இல் வெளியானது.

கதைக்களத்துக்காகவும் அதில் பேசப்பட்ட கருத்துகளுக்காகவும் பெருமளவு பிரபலமான அது, சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை 2021இல் வென்றது. கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது காதலியுடன் தூங்கிக் கொண்டிருப்பான்.

தூக்கத்திலிருந்து எழுந்து வீட்டுக்கு வெளியே வரும் போது நிறவெறி பிடித்த ஒரு வெள்ளைக்கார போலீஸ் அதிகாரியால் விசாரிக்கப்படுவான். மெல்ல மெல்ல அந்த அதிகாரி கோபம் அடைவார்.

இருவருக்கும் விவாதம் வலுக்கும். அந்த இளைஞன் மீது நிறவெறியுடன் அவர் பேசுவார். வெறி முற்றி இறுதியில் அந்த அதிகாரி, அந்த இளைஞனைச் சுட்டுக் கொன்றுவிடுவார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in