கதையுடன் பாடலும் ‘லபக்’! | சுட்ட கதை 26

கதையுடன் பாடலும் ‘லபக்’! | சுட்ட கதை 26
Updated on
2 min read

இதுவரை இத்தொடரில் 2000 முதல் 2025 வரை வந்திருக்கும் சுட்ட கதைகளை வரிசையாக, ஒவ்வொரு வருடமாக அணுகினோம். இனி இதே காலக்கட்டத்தில் வந்திருக்கக்கூடிய சில படங்களைப் பற்றிப் பார்ப்போம். இவை சற்றே வித்தியாசமான முயற்சிகள் என்று பேசப்பட்டவை.

அவற்றை எங்கிருந்து எடுத்தார்கள் என்று ஆராயலாமா? 1946இல் ‘ரொமான்ஸ் ஆன் த ஹை சீஸ்’ (Romance on the High Seas) என்கிற திரைப்படம் வெளியானது. நாயகன் - நாயகி இருவரும் கணவன், மனைவி.

ஒருவரை இன்னொருவர் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கும் சூழல். அந்த நேரத்தில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்துக்குச் செல்வதற்காக, சொகுசுக் கப்பலில் பயணிக்க ஒரு டிக்கெட் மட்டும் வாங்குகிறார் மனைவி.

வியாபார நிமித்தமாகத் தனக்கு இருக்கும் கடினமான வேலைகளால் கணவனால் அந்தப் பயணத்தில் மனைவியுடன் இணைந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், மனைவி தனியாகச் சொகுசுக் கப்பலில் செல்வதைத் தாங்க முடியாத கணவன், ஒரு துப்பறியும் நிபுணரிடம் மனைவியைப் பின்தொடர்ந்து சென்று, அவள் தனக்குத் துரோகம் செய்கிறாளா என்று கண்காணிக்கும்படி சொல்கிறான்.

அந்தத் துப்பறியும் நிபுணரும் அதே சொகுசுக் கப்பலில் பயணம் மேற்கொள் கிறார். ஆனால், கடைசி நிமிடத்தில் தனக்குப் பதிலாக வேறொரு பெண்ணைக் கப்பலில் அனுப்புகிறாள் மனைவி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in