

ஹாலிவுட்டில் 2018இல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘நைட் ஸ்கூல்’ (Night School). உயர்நிலைப் பள்ளியில் இறுதி யாண்டுகளில் தனது தேர்வுகளை எழுத முடியாமல் பள்ளியிலிருந்து இடை நின்றவன் டெட்டி.
அவனால் இறுதித் தேர்வை எழுத முடியாமல் போனதற்கு அவனுக்கு ‘கற்றல் குறைபாடு’ (Dyslexia) பிரச்சினை’ இருப்பதே காரணம். இப்படியொரு பிரச்சினை இருப்பது அவனுக்கே தெரியவில்லை.
பள்ளிக் காலத்துக்குப் பல வருடங்களுக்குப் பின்னர் ஒரு பிரபலமான பார்பெக்யூ (BBQ) கடையில் ஒரு சிறிய வேலையில் இருக்கும் அவன், அதைப் பெரிய பதவியில் இருப்பதுபோல் நினைத்துக் கொண்டு வாழ்ந்துவருகிறான்.
அவனுக்கு ஒரு காதலி. அவளை அதே கடைக்கு அழைத்து வந்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ள ‘ப்ரபோஸ்’ செய்கிறான். அப்போது ஷாம்பெய்ன் பாட்டிலைத்
திறக்கும்போது அதன் தக்கை மூடிஅங்கிருக்கும் எரிவாயுக்கலன் மீது பட்டு பெரிய தீவிபத்தாகி விடுகிறது.
அதில் அந்தக் கடை எரிந்துபோவதில் டெட்டிக்கு வேலை பறிபோய் நிர்க்கதி யாகிறான். இதைக் காணும் டெட்டியின் பள்ளிக்கால நண்பன்: “ நீ மீண்டும் நம் பள்ளிக்குச் சென்று எழுதாமல் விட்டுவந்த தேர்வுகளை எழுதி, முறையாகப் பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்வதற் கான சான்றிதழைப் (GED) பெற்று வந்தால் என்னுடைய நிதி மேலாண்மை நிறுவனத்தில் வேலை தருகிறேன்” என்கிறான்.