இந்து டாக்கீஸ்
அப்பாவான பப்பு! | சுட்ட கதை 07
ஹாலிவுட்டில் ‘பிக்’ (Big) என்கிற படம் 1988இல் வெளியானது. அதில் வரும் சிறுவன், ஒரு கண்காட்சிக்குச் செல்வான். அங்கே ஓர் இயந்திரம் இருக்கும். அதில் காசு போட்டால் எதிர்காலத்தைச் சொல்லும். சிறுவன் அதில் காசு போட, திடீரென்று பெரிய மனிதனாக மாறிவிடுவான்.
அவனுடைய உள்மனம் ‘நான் இப்போது பெரியவனாக ஆகவேண்டும்’ என்று நினைக்கப்போய், அதையே அந்த இயந்திரம் நிறைவேற்றிவிடும். இதன்பின் அவனது வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே மீதிக்கதை.
