

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி, திரைக்கதை எழுத்தாளராகப் புகழ்பெற்ற பில்லி வைல்டர் (Billy Wilder), ஹாலிவுட்டின் ரசனைப் போக்கை மாற்றிய இயக்குநர்களில் முக்கியமானவர்.
புகழ் பெற்ற நடிகர்கள் கேரி கூப்பரையும் ஆட்ரி ஹெப்பர் னையும் வைத்து 1957இல் இவர் எழுதி இயக்கிய ‘லவ் இன் த ஆப்டர்னூன்’ (Love in the Afternoon) ஒரு ‘ரொமாண்டிக் காமெடி’ வகைமைப் படம்.
இதில் ஃபிராங்க் என்கிற ‘பிளேபாய்’ நாயகன் வேடம் ஏற்றவர் கேரி கூப்பர். ஃபிராங்க் பல பெண்களுடன் பழகுபவர். அப்படி அவர் பழகும் ஒரு பெண்ணுடைய கணவருக்குச் சந்தேகம் வந்து விடும். அவன் பாரிஸ் நகரத்தில் இருக்கும் ஒரு துப்பறியும் நிபுணரிடம் உண்மையைக் கண்டறியும் வேலையைக் கொடுப்பார்.