

விளையாட்டுப் போட்டி ஒன்றைக் காண நான்கு நண்பர்கள் (அதில் இருவர் அண்ணன் - தம்பி), டிஷ் ஆன்டெனா பொருத்தப்பட்ட காரவேன் போன்ற ஒரு பெரிய வண்டியில் ஜாலியான கூச்சல் கும்மாளத்துடன் செல்கின்றனர். வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு குறுக்கு வழியில் செல்கின்றனர்.
அந்த வழி அவர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. குறுக்கு வழியில் அவர்கள் வாகனம் செல்லும் போது ஒரு கொலையைக் காண நேர்ந்துவிடுகிறது.
இதனால், கொலையுடன் நேரடித் தொடர்புடைய கும்பலால் துரத்தப்பட்டால் அவர் களின் நிலை என்ன ஆகும்? இயக்குநர் ஸ்டீபன் ஹாப்கின்ஸ் (Predator 2, Ghost and the Darkness, Lost in Space போன்ற பிரபல பிளாக் பஸ்டர் கமர்ஷியல் ஹாலிவுட் படங்களின் இயக்குநர்) இயக்கத்தில் 1993இல் வெளியான ‘ஜட்ஜ்மென்ட் நைட்’ (Judgement Night) படத்தின் கதை இதுதான்.
விறுவிறுப்பான துரத்தல்கள் மூலம் இந்தக் கதை நன்றாகவே இயக்குநரால் சொல்லப் பட்டிருக்கும். அதை அப்படியே எடுத்துக் கொண்டு, அதில் ஹைதராபாத்தில் வசிக்கும் செல்வந்தரான விஸ்வநாத் என்பவரின் மகள் கடத்தப்பட்டு, அதை ஒரு போலீஸ் அதிகாரி துப்பறி வதை இடையில் செருகி, அந்தப் பெண்ணை நான்கு நண்பர்கள் காப்பாற்றும் கதையாக உல்டா செய்து எடுக்கப்பட்டதே ‘சரோஜா’ (2008).