போட்டி போட்டு ‘காப்பி’ அடித்ததும் தற்செயல்தானா? | சுட்ட கதை 42

போட்டி போட்டு ‘காப்பி’ அடித்ததும் தற்செயல்தானா? | சுட்ட கதை 42
Updated on
2 min read

‘செ ரண்டிபிடி’ (Serendipity) என்கிற ஆங்கிலப் படத்திலிருந்து அப்படியே எடுக்கப்பட்ட தமிழ்ப் படமான ‘ஜே ஜே’ பற்றி இத்தொடரில் முன்பு பார்த்திருந்தோம். அதே ஆங்கிலப் படத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்னொரு தமிழ்ப் படம், 2003இல் ‘ஜே ஜே’ வெளியான ஒரு மாதம் கழித்து, டிசம்பரில் வெளியானது. தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் வெளியானது. அதுதான் ‘எனக்கு 20 உனக்கு 18’.

‘ஜே ஜே’ படத்தைப் பார்த்த ரசிகர்கள், ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டுமே ஒரே போன்ற கதையமைப்புடன் இருப்பது எப்படி என்று கேட்டார்கள். அந்தக் கேள்விக்கான பதில் ‘செரண்டி பிடி’யில் இருக்கிறது.

இரண்டு மனிதர்கள் விதியின் விளையாட்டால் யதேச்சையாக ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். இருவருக் குமே ஒருவரையொருவர் பிடித்துவிடுகிறது. ஆனால், எப்படித் திடீரென்று சந்தித்தார்களோ, அப்படியே பிரிந்து விடுகிறார்கள்.

ஆனால், ஒருவரை இன்னொருவரால் மறக்கவே முடிய வில்லை. எனவே பிரிந்திருக்கும் நாள்களில்கூட ஒருவரை இன்னொரு வர் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்குப் பின் இருவரும் மீண்டும் சந்திக்கும் தருணம் நெருங்குகிறது. ஆனால், ஏதோ ஒரு சம்பவம் மறுபடியும் அவர்களைப் பிரித்துவிடுகிறது. இதன்பின் பல இன்னல்களை அனுபவித்து, இறுதியில் இருவரும் ஒன்றுசேர்கிறார்கள். இது தான் ‘செரண்டிபிடி’யின் கதைக்கரு. இதுவேதான் ‘ஜே ஜே’, ‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படங்களின் கதைக் கருவும்.

‘ஜே ஜே’, ‘செரண்டிபிடி’யிலிருந்து அப்படியே பல காட்சிகளை வைத் திருக்க, ‘எனக்கு 20 உனக்கு 18’, மூலப் படத்தின் காட்சி களைச் சற்றே மசாலா தன்மைக்குள் மூழ்க வைத் திருந்தது. அந்த வகையில், ‘செரண்டிபிடி’யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டும் இந்தப் படம் இருக்கும். அதேநேரம், ‘செரண்டிபிடி’ இல்லாமல் ‘எனக்கு 20 உனக்கு 18’ இல்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in