96 படத்துக்கு 3 உறவுகள் | சுட்ட கதை 28

96 படத்துக்கு 3 உறவுகள் | சுட்ட கதை 28
Updated on
2 min read

வாழ்க்கையில் எங்கோ தொலைந்துபோன இரண்டு காதலர்கள், பல ஆண்டுகள் கழித்துச் சந்தித்து, ஒரு நாளை ஒன்றாகச் சேர்ந்து செலவிட்டால் எப்படி இருக்கும்?இந்தக் கதை ஹாலிவுட்டில் சில முறைகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற சுயாதீன இயக்குநர் ரிச்சர்ட் லிங்க்லேட்டர், ’பிஃபோர் சன்ரைஸ்’ (Before Sunrise), ‘பிஃபோர் சன்செட்’ (Before Sunset), ‘பிஃபோர் மிட்நைட்’ ( Before Midnight) ஆகிய மூன்று படங்களை இதே கதையோடு, ஒரே நாயகன் நாயகியோடு எடுத்திருக்கிறார்.

முதல் படமான ‘பிஃபோர் சன்ரை’ஸில், ஜெஸ்ஸி என்கிற இளைஞனும் செலின் என்கிற இளம்பெண்ணும் எதேச்சை யாகச் சந்தித்துக்கொள்வார்கள். அதன்பின்னர் அந்த முழுப் படமும் அவர்கள் இருவரும் எப்படி ஓர் இரவில் பழகுகிறார்கள் என்பதே கதை.

மறுநாள் காலையில் நாயகன் ஜெஸ்ஸிக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் அந்த இரவு முழுதும் சுற்றித் திரிவார்கள். திரைப்படம் முடியும்போது ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் அதே பகுதியில் மறுபடி சந்திக்கலாம் என்று முடிவெடுத்துப் பிரிவார்கள்.

இரண்டாவது பாகமான ‘பிஃபோர் சன்ரைஸ்’ ஒன்பது வருடங்கள் கழித்துக் கதை நடப்பதுபோல் திரைக்கதை அமைத்தார் இயக்குநர். அதில் நாயகன் ஜெஸ்ஸி ஒரு புகழ்பெற்ற நாவலை எழுதியிருப்பான்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in