

ஒரு மனிதனின் மனைவியை இரண்டு முரடர்கள் கொன்றுவிடுகிறார்கள். தடுக்கப் போராடிய அந்த மனிதனின் தலையில் பலமாக அடித்துவிடுகிறார்கள். இதனால் அடி வாங்கிய தருணத்திலிருந்து அவர் தனது நினைவுகளைத் தற்காலிகமாக இழந்துவிடுகிறார். ஆனால், அவருக்கு முற்றிலும் மறந்து விடுவதில்லை.
அதாவது நினைவுகளைக் குறிப் பிட்ட காலத்துக்கு மேல் அவனால் நினைவில் வைத்திருக்க முடியாது. இதனால், கையில் எழுதப்பட்ட குறிப்புகள், உடனடியாக எடுக்கப்படும் போலராய்ட் புகைப்படங்கள், தனது உடலில் ஆங்காங்கே பெயர்கள், குறிப்புகளைப் பச்சை குத்திக் கொள்வது என மனைவியைக் கொன்றவர் களை நினைவில் வைக்க, இதுபோன்ற உத்திகளைக் கையாண்டு அவர் பழிதீர்ப்பார்.