

வெளியாகிப் புகழ்பெற்ற கையோடு ஹாலி வுட்டில் படமாக்கப்பட்டது ஓர் ஆங்கில நாவல். அந்த நாவலின் தலைப்பையே சூட்டிக்கொண்டு 2005இல் வெளியானது. அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து 2007இல் அதே கதையுடன் தமிழில் வெளியானது ஒரு படம்.
அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் சீகல் எழுதி 2003இல் வெளியான க்ரைம் த்ரில்லர் நாவல் ‘டீரெய்ல்டு’ (Derailed). அந்த நாவலின் நாயகன் சார்லஸ் விளம்பரத் துறையில் பணியாற்றுபவர். அவருடைய மனைவி டியான்னா. இவர்களுக்கு அன்னா என்றொரு மகள்.
ஆனால் அன்னாவுக்கு மிக இளம் வயதிலேயே டைப் 1 சர்க்கரை நோய் இருப்பதால், அவள் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நிலை. இதனால் சார்லஸ் - டியான்னா தம்பதி மனதளவில் பாரத்துடன் வாழ்கிறார்கள். மகள் மீது எப்போதும் கவனம் செலுத்தவேண்டியிருப்பதால் சார்லஸின் தொழில் வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படுகிறது.