

தாய்லாந்து மொழியில் 1999இல் வெளியானது ‘பாங்காக் டேஞ்சரஸ்’ (Bangkok Dangerous) என்கிற படம். இதன் நாயகன் காங், காது கேட்க முடியாத, வாய் பேசாத ஒருவன். ஒரு நாள், துப்பாக்கிப் பயிற்சி கிளப் ஒன்றில் ஜோ என்பவன் காங்கை முதன்முதலில் சந்திப்பான்.
அப்போது காங்கிடம் துப்பாக்கியைக் கொடுத்துச் சுட்டுப் பார்க்கச் சொல் வான் ஜோ. காங் சரியாக இலக்கை நோக்கி மிகத் துல்லியமாகச் சுட, அன்றிலிருந்து காங்கின் நண்பனாக மாறிவிடுவான் ஜோ. இருவரும் சேர்ந்து கூலிக்குக் கொலைகள் செய்வார்கள்.