நகலெடுத்தலும் அகத்தூண்டலும் | சுட்ட கதை 22

நகலெடுத்தலும் அகத்தூண்டலும் | சுட்ட கதை 22
Updated on
2 min read

இந்த வாரம் ‘இன்ஸ்பிரேஷன்’ என்பதற்கும் அப்படியே நகலெடுப்பதற்குமான வேறுபாட்டைப் பார்க்கலாம். இன்ஸ்பிரேஷன் என்பது ஆரோக்கியமானது. காட்சிகளை அப்படியே சுடாமல், ஒரு படத்தைப் பார்க்கையில் நம் மனதில் ஏதோ ஒன்று தோன்றும்.

அதைப் புத்திசாலித்தனமாக மாற்றி, புதிதாக ஒரு படத்தை எடுக்கும் விதமே இன்ஸ்பிரேஷன். இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. அவரே பலமுறை இதைப் பற்றிப் பேசியிருக்கிறார். நாம் ஏற்கெனவே இந்தத் தொடரில் பார்த்த ‘மைனா’ இன்னோர் எடுத்துக்காட்டு.

2006இல் கொரியாவில் ‘எ டர்ட்டி கார்னிவல்’ (A Dirty Carnival) வெளியானது. இது பலருக்கும் தெரியாத படமாக அப்போது இருந்தது. இதன் கதையைப் பார்ப்போம். கொரியாவில் மிகச்சிறிய கேங் லீடராக இருப்பவன் கிம்-ப்யூங்-டூ.

அவனுக்குப் பணப்பிரச்சினை வருகிறது, அதனால், தன்னுடைய பாஸாகிய சாங்-ச்சுல்லுக்குத் தெரியாமல், சாங்-ச்சுல்லின் பாஸ் (அதாவது இவனுடைய பாஸின் பாஸ்) ஹ்வாங் என்னும் மிகப்பெரிய தாதாவிடம் பேசி, அவருக்குப் பிரச்சினையாக இருக்கும் ஒருவனைக் கொன்றுவிடுகிறான்.

இதனால் தாதா அவனைப் பாராட்டி, அவனுடன் நட்பாகிறார். கொரியாவின் நிழலுலகில் இப்படியெல்லாம் ‘பைபாஸ்’ செய்து காரியம் சாதிக்க நினைப்பது கேங்ஸ்டர்கள் பின்பற்றும் நடத்தைக்கும் விதிகளுக்கும் புறம்பானது. எனவே, இந்த விஷயத்தை இருவரும் ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவுசெய்கிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in