வெளிச்சம் பெறும் திரை நூல்கள் | சென்னை புத்தகக் காட்சி

வெளிச்சம் பெறும் திரை நூல்கள் | சென்னை புத்தகக் காட்சி
Updated on
3 min read

மஞ்சள் தருணங்கள்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சர்வதேசத் திரைப்படங்களைத் தமிழ் வாசகர் களுக்கு அறிமுகப்படுத்தி வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கியத்துக்கும் சினிமாவுக்குமான உறவைக் கூர்ந்து அவதானித்து எழுதிவரும் அவருடைய புதிய நூலான இதில், கச்சிதமான அளவில் அமைந்த 50 உலக சினிமா கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

நாவல், நாடகம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, படைப்பாளியின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள், உண்மைச் சம்பவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான செவ்வியல், சமகால உலகத் திரைப்படங்களையும் அவற்றில் சித்தரிக்கப்படும் வாழ்வின் நுட்பங்களையும் தனக்கே உரித்தான மொழியில் விவரித்துள்ளார். இந்த 50 படங்களில் அனிமேஷன், ஆவணப்படங்கள், டாக்கு டிராமா, சினிமாவைப் பற்றிய சினிமாக்களும் அடங்கியிருக்கின்றன.

மஞ்சள் தருணங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன்

பக்கங்கள் 248

விலை: 280/-

தேசாந்திரி பதிப்பகம்

சென்னை -93

தொடர்புக்கு: 044 23644947

மக்களிசை மேதை எம்.பி.சீனிவாசன்: இயக்குநரின் கண்கள் என ஒளிப்பதிவாளரைக் குறிப்பிடுவது உண்டு. அதைப்போல் இயக்குநர் படைக்கும் கதாபாத்திரங்கள், காட்சியின் உணர்வை மீட்டுபவர் என இசையமைப்பாளரைச் சொல்லலாம். அப்படியோர் இசையமைப்பாளரைத் தமிழ் சினிமா முதன்முதலில் கண்டதென்றால் அவர் எம்.பி.சீனிவாசன்.

அவரது பொதுவுடைமை இயக்க வாழ்வு, கலை வாழ்வு, திரை வாழ்வு, தொழிற்சங்க வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு என நான்கு வருட ஆய்வின் வழி முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் மு.இக்பால் அகமது. எம்.பி.எஸ் ஸுக்கும் நிமாய் கோஷுக்குமான பிணைப்பு, திரையுலகில் தொழிற்சங்கங்களைக் கட்டமைத் தது, சேர்ந்திசையில் இந்தியாவுக்கே வழிகாட்டியது, மலையாளப் படவுலகில் அவரின் சாதனைகள் எனப் பெரும் தகவல் களஞ்சியமாக இந்நூல் ஆய்வின் ஆழத்தில் மூழ்க அழைக்கிறது.

மக்களிசை மேதை

எம்.பி.சீனிவாசன்

மு.இக்பால் அகமது

பரிசல் புத்தக நிலையம்

சென்னை - 75

பக்கங்கள் 276

விலை 350/-

தொடர்புக்கு: 93828 53646

கினோ 3.0: திரைப்பட ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் எழுத்தாளர், இயக்குநர் கிறிஸ்டோபர் கென்வொர்த்தியின் நடைமுறைப் படமாக்கம் குறித்த எழுத்துகள் ஒரு சிறந்த வழிகாட்டி. குறிப்பாக, அவர் காட்சிகளை விளக்கும் விதம் மிகவும் எளிமையாகவும் அதேவேளை தொழில்முறை சார்ந்தும் இருக்கும். அவருடைய எழுத்துகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் என்பது மிகுந்த அர்ப்பணிப்பும் திரைக்கலையின் மீது அபரிமிதமான காதலும் இருந்தால் தவிர சாத்தியமில்லை.

கென்வொர்த்தியின் எழுத்துகளைத் தொடர்ந்து தமிழில் தந்து வரும் ப்யூர் சினிமா பதிப்பகம், அசாத்திய நம்பிக்கையுடன் ‘கினோ 3.0’ நூலைப் பெரும் பதிப்பாக வெளியிட்டிருக்கிறது. அதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள தீஷா, ஆங்கிலத்தில் உள்ள தொழில்நுட்பச் சொற்களில் (Cinematography terms) மொழிபெயர்க்க அவசியமில்லாதவற்றை அப்படியே கொடுத்திருப்பது சினிமாவைக் கற்றுக்கொண்டுவரும் மாணவர்கள், திரை ஆர்வலர்களுக்குத் தொழில்நுட்ப அறிவை எளிதாகக் கடத்தும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in