

பதினான்கு வயதில் நாடகம் எழுதியும் பதினேழு வயதில் திரைப்படங்களுக்கு எழுதியும் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் கலைஞர் மு.கருணாநிதி.
1947இல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளி வந்த ‘ராஜகுமாரி’ படத்தில் உதவி வசனகர்த்தாவாக அங்கீகாரம் பெற்று, 2011இல் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ வரை 75 திரைப்படங்களுக்கு எழுதிக் குவித்தவர். அவர் எழுதிய திரைப்படங்களிலிருந்து 21 படங்களைக் கருத்தாகத் தேர்ந்தெடுத்து கலைஞரின் கதை, வசன ஆளுமையைக் கூர்ந்து திறனாய்வு செய்து இந்நூலினை எழுதியிருக்கிறார் எஸ்.இளங்கோ.
இவர், புதுக்கோட்டை வட்டாரத்தில், தன்னார்வலராக தொடர்ந்து இயங்கி, நல்ல சினிமாவுக்கான ரசனையை வளர்த்து வருபவர்களில் ஒருவர். கலைஞர் மு.கருணாநிதியின் தொடக்க கால திரை எழுத்துகளை லயித்து ரசித்தவர்களையும் அவரது திரை எழுத்தின் மைய இழையாக இருக்கும் திராவிட அரசியலின் வாசனையை நுகர விரும்புகிறவர்களையும் இப்புத்தகம் வெகுவாகக் கவரும்.
| தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து lஎஸ்.இளங்கோ பக்கங்கள்: 320, விலை ரூபாய்: 280 அகநி வெளியீடு எண்: 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி - 604408 தொடர்புக்கு: 9842637637/ 9444360421 |