

இடைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் பழைய வண் ணாரப்பேட்டையில் பொது வுடைமைக் கட்சித் தொண்டர் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் துறை, பொறியியல் கல்லூரி மாணவர் கார்த்தியையும் (பிரஜன்) அவரது நண்பர்கள் 5 பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் அள்ளிக்கொண்டு செல்கிறது. அவர்களில் ஒருவர்தான் கொலை யாளி என்ற முடிவுக்கு காவல் துறை வருகிறது. ஆனால், இதில் உதவி ஆணையர் மூர்த்திக்கு (ரிச்சர்ட்) நம்பிக்கை இல்லை. அரசியல் கொலையின் சூத்திரதாரி யைத் தேடி அவர் புறப்படுகிறார். இன்னொரு பக்கம், தனது நண் பனை மீட்க உண்மையான குற்ற வாளியைக் கண்டுபிடித்தாக வேண் டும் என்று கார்த்தியும் புறப்படு கிறார். இருவரில் யார் முதலில் குற்றவாளியை நெருங்கினார்கள், அவர் யார்? அவரது பின்னணி என்ன என்பதுதான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’.
கதையைத் தொடங்கும் விதம், கையாளும் பிரச்சினை, அதை நோக்கி கவனச் சிதறல் இல்லா மல் பயணிப்பது எனத் திரைக் கதை வலுவாக அமைக்கப்பட் டிருக்கிறது. ஆனால், திரைக் கதையை நகர்த்திச் செல்லும் பல காட்சிகளில் அழுத்தம் இல்லாததால் அவ்வப்போது படம் தொங்கிவிடுகிறது.
சந்தேகத்தின்பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்படு பவர்களின் வாயிலாக வட சென்னையின் அன்றாட வாழ்க் கையின் சித்திரங்களைத் துணைக் கதாபாத்திரங்களின் அனுபவச் சிதறலாகத் தந்திருக்கும் இயக்கு நரைப் பாராட்டலாம். ‘பட்டறை குமார்’ என்ற மனிதனின் முகத்தைக் கடைசிவரை வெளிப்படுத்தாமல், நிழலாகவே காட்டி, அவரது நிழல் உலக ராஜ்ஜியத்தின் பயங்கரத்தைச் சித்தரித்த விதம் புதுமை!
காதலே தேவைப்படாத இந்தக் கதையில் திணிக்கப்பட்டிருக்கும் காதல் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. அதை முக்கியப் பிரச்சினையுடன் இணைத்திருந்தால் படத்தின் வண் ணம் இன்னும் கூடியிருக்கலாம்.
பிரஜனுக்கு சென்னையின் வட்டார வழக்கு சரியாக வர வில்லை. இவரது நண்பர்களாக வரும் இளைஞர்கள் நன்கு நடித் திருக்கிறார்கள். உதவி ஆணை யராக வரும் ரிச்சர்ட் கம்பீரமாக நடித்திருக்கிறார். தன் கதாபாத்திரத் துக்குத் தேவைப்படும் புத்திசாலித் தனத்தின் போதாமையை மீறி யதார்த்தமான காவல் அதிகாரி யாக நடித்திருக்கிறார். கருவேப் பிலை கதாநாயகியாக நடித் திருக்கும் அஸ்மிதா பற்றி குறிப்பிட ஏதுமில்லை.
கதைக்கான மனநிலையை உருவாக்க ஒளி குறைந்த ஒளிப் பதிவு போதும் என்று கருதி யிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாருக். அது நன்றாகவே எடுபட்டிருக்கிறது. ஆனால், இசை யமைப்பாளர் ஜூபின், படத் தொகுப்பாளர் எஸ்.தேவராஜ் ஆகிய இருவரும் சரிவரத் தங்கள் வேலையைச் செய்யாதது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
வண்ணம் குறைவாக இருந் தாலும், அரசியல் அழுக்கு புரை யோடிக் கிடக்கும் வடசென்னைப் பகுதியின் இருட்டு மனிதர் ஒருவரைத் தேடிச் செல்லும் விறுவிறுப்பான பயணத்தை யதார்த்தத்துடன் தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மோகன்.ஜி.