கோலிவுட் ஜங்ஷன்: ஷிவாங்கியின் தீவானா!

கோலிவுட் ஜங்ஷன்: ஷிவாங்கியின் தீவானா!
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் பெரிய திரையில் அறிமுகமாகி கவனம் ஈர்த்தார் சின்னத்திரையின் செல்லப் பாடகியான ஷிவாங்கி. தற்போது அவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பலரும் முயன்று வருகின்றனர்.

ரீல்ஸ், ஸ்டோரிகளில் பயன்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராம் பிரத்யேகமாக அதன் பிளாட் ஃபார்மில் மட்டும் கிடைக்கும் விதமாக மியூசிக் டிராக்குகள், வீடியோக்களின் தொகுப்பை உருவாக்கி #1MinMusic என்கிற ஹேஷ் டேக்குடன் வெளியிட்டு நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது. இம்முயற்சியில் இந்தியா முழுவதும் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது ஒரு நிமிட பாடல்களைக் கொடுத்து வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் தமிழுக்காக சில்வர் ட்ரீ என்கிற நிறுவனம் 25 பிரபலமான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. அந்த வரிசையில் பின்னணிப்பாடகி, நடிகராக இருக்கும் ஷிவாங்கியை வைத்து ‘தீவானா' என்கிற #1MinMusic இசைக் காணொலியை வெளியிட அது வெகு விரைவாக 30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. குமரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடலுக்கு அனி வீ இசையமைத்துள்ளார்.

சசியின் தோற்றம்! - இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான ‘நான் மிருகமாய் மாற’, ‘காரி’ என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகின. அந்தப் பரபரப்பு அடங்கும் முன்னர், தற்போது அவரது அடுத்த படத்தின் முதல் தோற்றத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

‘கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் அடுத்து இயக்கியுள்ள ‘நந்தன்' படத்தின் முதல் தோற்றம்தான் அது. இதில் பாலாஜி சக்திவேல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தஞ்சை பகுதியின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in