கோலிவுட் ஜங்ஷன்: அனுமதி பெற்று உருவான கதை!

கோலிவுட் ஜங்ஷன்: அனுமதி பெற்று உருவான கதை!
Updated on
2 min read

“டிஜிட்டல் யுகத்தால் பல நண்மைகளை அனுபவிக்கிறோம். அதே நேரம், ஏமாற்றும் செயல்பாடுகளும் புதிது புதிதாக பெருகிவருகின்றன. அவற்றில், தனி மனிதர்களின் ஒளிப்படங்களைத் திருடி ‘மார்பிங்’ செய்து பிளாக் மெயில் செய்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். காவல் துறையில் ‘சைபர் குற்றப் பிரிவு’ ஒன்று இயங்குவது பற்றி இந்த டிஜிட்டல் மாபியா அலட்டிக் கொள்வதில்லை.

அப்படிப்பட்டவர்களிடமிருந்து பெண்கள் எப்படித் தங்களைப் பாதுகாத்துக்கொள்வது என்பதை, ஒரு விழிப்புணர்வுப் படமாக உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் ஈஷான். இன்னும் தலைப்பு சூட்டப்படாத இப்படத்துக்கு அவரே திரைக்கதை எழுதி, கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரனாலி என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்ரமணி உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவுக்கு வந்த விநோதப் புகார்கள், வழக்குகளை முறையான அனுமதியுடன் ஆய்வுசெய்து மாரிச்செல்வன் எழுதியிருக்கும் கதை இது. எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனம் தயாரித்துவருகிறது.கோமல் சர்மாவின் ‘பெண்டுலம்’ இயக்குநர் ஷங்கரின் பல படங்களுக்கு ‘மேக்கிங்’ ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பி.சதீஸ்குமார். பல குறும்படங்களை இயக்கியுள்ள இவர், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பெண்டுலம்’.

உளவியல் ஃபேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகும் இதில், ‘மரக்கார்’ படப்புகழ் கோமல் சர்மாவும் ‘அசுரன்’ படப்புகழ் அம்மு அபிராமியும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு பெண்களை முன்னிறுத்தி உருவாகும் இப்படத்தில் மேலும் எட்டு முக்கியக் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் சைமன் கிங். சென்னை, தலக்கோணம், ஆந்திரத்தின் கர்னூல்,கோவா ஆகிய இடங்களில் நான்கு கட்டமாக படப்பிடிப்பு நடக்கிறது.

கோமல் சர்மாவின் ‘பெண்டுலம்’

இயக்குநர் ஷங்கரின் பல படங்களுக்கு ‘மேக்கிங்’ ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பி.சதீஸ்குமார். பல குறும்படங்களை இயக்கியுள்ள இவர், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘பெண்டுலம்’. உளவியல் ஃபேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகும் இதில், ‘மரக்கார்’ படப்புகழ் கோமல் சர்மாவும் ‘அசுரன்’ படப்புகழ் அம்மு அபிராமியும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இரண்டு பெண்களை முன்னிறுத்தி உருவாகும் இப்படத்தில் மேலும் எட்டு முக்கியக் கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. சூர்யா இந்திரஜித் பிலிம்ஸ் சார்பில் திரவியம் பாலா தயாரிக்கும் இப்படத்துக்கு இசையமைக்கிறார் சைமன் கிங். சென்னை, தலக்கோணம், ஆந்திரத்தின் கர்னூல்,கோவா ஆகிய இடங்களில் நான்கு கட்டமாக படப்பிடிப்பு நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in