

பொன்னியின் செல்வன் நாவல் 60 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அதை பிரம்மாண்ட மான முறையில் நாடகமாக நிகழ்த்திக் காட்டும் பிரமிப்பூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மேஜிக் லான்ட்டர்ன் நாடகக் குழு. எஸ்.எஸ். இன்டர் நேஷனல் லைவ் தயாரிப்பில் நிகழும் இந்த அரிய முயற்சி சென்னை மியூசிக் அகாடமியில் ஜூன் 8ம் தேதியில் இருந்து 14 வரை அரங் கேறுகிறது. மதுரையில் ஜூன் 27,28,29 தேதிகளிலும், கோவையில் ஜூலை 4,5,6 தேதிகளிலும் நடைபெற இருக்கிறது என்று எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தின் இளங்கோ குமணன் தெரிவிக்கிறார்.
மேஜிக் லான்ட்டர்ன் குழுவினர் பொன்னியின் செல்வனை ஏற் கெனவே 1999-ல் நாடகமாக மேடை யேற்றியிருக்கிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. சுருக்கமாக அமைந்த இந்த முயற்சியை இப்போது விரிவு படுத்தியிருக்கிறார்கள். ஐந்து பாகங் களைக் கொண்ட இந்நாவலை மூன் றரை மணி நேர நாடகமாக மாற்றியிருக் கிறார்கள்
அமரர் கல்கியின் கற்பனை வளத்திற் கும் எழுத்தாளுமைக்கும் அடையாள மாகத் திகழும் இந்த நாவலை நாட கமாக்கும் சவாலை நாடகக் குழு எந்த அளவுக்கு வெற்றிகரமாக எதிர் கொள்ள இருக்கிறது என்பது ஜூன் 8-ம் தேதி தெரிந்துவிடும். ஆனால், சென்னை மாம்பலம் மகாலட்சுமி கல் யாண மண்டபத்தில் தீவிரமாக நடந்து வருகிறது நாடகத்திற்கான இவர்களின் ஒத்திகை.
‘‘பொன்னியின் செல்வனில் வாசகர் கள் ரசித்த அனைத்துக் கூறுக ளும் நாடகத்திலும் இருக்கும் படி திரைக்கதையை உருவாக்கியிருக் கிறோம். கதாபாத்திரங்களின் சித்தரிப் பிலும் சம்பவங்களிலும் கூடுமானவரை மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான், அருள்மொழிவர்மன், குந்தவை, நந்தினி, பூங்குழலி போன்ற முக்கி யக் கதாபாத்திரங்களின் படைப் பில் கூடுதல் கவனம் செலுத்தி யிருக்கிறோம். பொன்னியின் செல் வனின் தீவிர ரசிகர்கள், கதை தெரி யாமல் நாடகத்தைப்பார்க்க வருபவர் கள் என இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் திரைக் கதையை அமைத்திருக்கிறோம்’’, என்கிறார் நாடகத்திற்குத் திரைக்கதை எழுதியிருக்கும் குமரவேல்.
"அந்த பிரம்மாண்ட கற்பனை வடிவத்தின் அனுபவத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்து வதற்காகவே நாடக அரங்க அமைப்பை வடிவமைக்கும் பொறுப்பை தோட்டாதரணியிடம் ஒப்படைத்திருக் கிறோம். அத்துடன், ஸ்பெஷல் எஃபக்டஸ், டிஜிட்டல் தொழில்நுட்பத் தையும் இணைத்திருக்கிறோம்’’ என்று சொல்கிறார் குமரவேல்.
நாவலில் இடம்பெற்றுள்ள தேவாரப் பாடல்கள், நடன, சண்டைக் காட்சிகள் என பெரும்பாலான அம்சங்களை அப் படியே நாடகத்திலும் பார்க்கலாம். நடிகர்களின் ஆடை வடிவமைப்பு ஓவியர் மணியம் அவர்கள் வரைந்த ஓவியங்களை மாதிரியாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் அனைவருக்கும் வசன உச்ச ரிப்பிற்காக சிறப்பு மொழிப் பயிற் சியும் வழங்கப்பட்டிருக்கிறது. நாடகத் தில் பயன்படுத்தப்போகும் அனைத்து கருவிகளையும் நாடகக் குழுவினரே வடிவமைத்திருக்கிறார்கள்.
‘‘சென்னையில் நாடகம் நடை பெறும் ஏழு நாட்களுக்கும் பொன்னியின் செல்வன் நாவல் பற்றிய கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருக்கி றோம். கல்கிக்கும், ஓவியர் மணியத்திற் கும் நடந்த உரையாடல்கள் , பொன் னியின் செல்வன் உருவாகிய விதம் போன்ற பல சுவாரஸ்யமான தகவல் கள் கண்காட்சிக்கு வரும் வாசகர் களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்’’ என்கி றார் இளங்கோ குமணன்.