

எழுத்தாளராகவும் ஊடகவிய லாளராகவும் தடம் பதித்தவர் செந்தூரம் ஜெகதீஷ். தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரையும் குறித்து பல்வேறு சந்தர்ப் பங்களில் எழுதியுள்ள 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். இந்நூலின் ஆசிரியராக அவருடைய எழுத்து நடை வசீகரிக்கிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் தொடங்கி ஆச்சி மனோரமா, நா.முத்துகுமார் எனக் கடந்த மூன்று தலைமுறைக் கலைஞர்கள் கட்டுரைகளில் பேசுபொருளாகியிருக்கிறார்கள். சில அஞ்சலிக் கட்டுரைகள், இன்னும் சில, முகநூல் பதிவுகள்போல் உள்ளன. அதே நேரம், இயக்குநர் பாலுமகேந்திரா பற்றிய பதிவு, வெளிப்படையாக இருக்கிறது.
முதலில் பாலுமகேந்திரா குறித்துத் தன்னுடைய மனம் தீர்மானித்துக்கொண்டதிலிருந்து, தான் பணியாற்றிய பத்திரிகைக்காக பேட்டி கண்டபின் நிலைப்பாடு மாறிப்போனதை அழகாகக் கூறியிருக்கிறார். ‘தவறாக மதீப்பீடு செய்யப்பட்ட ஒரு உணர்வுபூர்வமான கலைஞன்’ என்று அவரைப் பற்றிக் கூறுகிறார். அவருடனான சந்திப்பில் ‘திரைப்படங்களைப் பாதுகாக்க ஓர் ஆவணக்காப்பகம் தேவை’ என்பதை அவர் வலியுறுத்தியதை அழுத்தமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். புத்தகத்துக்கு உள்ளடக்கப் பக்கம் இல்லாததும் பக்க வடிவமைப்பில் கவனம் செலுத்தாததும் குறை.
தமிழ் சினிமா இது நம்ம சினிமா
செந்தூரம் ஜெகதீஷ்
பக்கங்கள் 201, விலை: ரூ.150
வெளியீடு: செந்தூரம் பதிப்பகம்
சென்னை - 112
தொடர்புக்கு: 94440 90037