

காலம் விழுங்கி ஏப்பம் விட்ட ஓலைச் சுவடிகள், காகிதச் சுவடிகள், பத்திரிகைகள், பருவ இதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், நோட்டீஸுகள், கையடக்க வெளியீடுகள் ஏராளம். அவற்றை அக்கறையோடு சேமித்து அடுத்தத் தலைமுறைக்கும் அறியக் கொடுப் பவர்கள் வெகுசிலர்தான்.
இந்தப் புத்தகத்தின் நூலாசிரியர், ஆராய்ச்சி நூலகங்களில் தேடிச் சேகரித்த தகவல்களை மிகவும் சுவாரசிமான நடையில் தந்திருக் கிறார். ஏற்கெனவே ‘அந்தக் காலப் பக்கங்கள்’ முதல் பாகம் வெளியாகி வாசகர்களின் ஆதரவைப் பெற்றிருந்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். இதில் மொத்தம் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எல்லா கட்டுரை களுமே நம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கின்றன. என்றாலும் ‘அந்தக் காலத்துச் சென்னை: பீப்பிள்ஸ் பார்க் என்கிற சிங்காரத் தோட்டம்’, ‘நாடக, சினிமா ராணிகள்’, நாடகமும் நவாபும் உள்ளிட்டப் பாதிக்கும் அதிகமான கட்டுரைகள் நம்மைச் சொக்கி இழுக்கின்றன.
அந்தக் காலப் பக்கங்கள் (பாகம் 2)
அரவிந்த் சுவாமிநாதன்
160 பக்கங்கள், விலை ரூ: 160/-
வெளியீடு : தடம் பதிப்பகம்,
சென்னை-29
தொடர்புக்கு: 9500045609