

தமிழ் நாடக உலகில், ‘சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்’ பல சிறந்த கலைஞர்களை மேடைக்கும் திரையுலகுக்கும் கொடுத்திருக்கிறது. ‘கலைமாமணி’ விருது பெற்ற நடிகர் பி.ஆர்.துரை அவர்களில் ஒருவர். அவரது உழைப்பும் கலையின் மீதான அவருடைய ஈடுபாடும் 60 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. 60-களில் தொடங்கி கலையுலகப் பிரபலங்கள் பலருடனும் தனக்கிருந்த நட்பின் அடிப்படையிலான நினைவலைகளை ஒரு களஞ்சியம்போல் ஒரு நூலாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். தனக்கே உரிய எளிய நடையில் கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தன்னுடைய குரு எஸ்.வி.சகஸ்ரநாமம் தொடங்கித் தன்னுடன் சமகாலத்தில் பயணித்தவர்கள், தற்காலக் கலைஞர்கள் என 73 பேரைக் குறித்த நினைவலைகளைத் தன்னுடைய கலையுலக வாழ்வுடன் தொடர்புபடுத்தி எழுதியிருக்கிறார்.
என் பார்வையில் பிரபலங்கள்
‘கலைமாமணி’ பி.ஆர்.துரை
பக்கம்: 316, விலை: ரூ.250
வெளியீடு: வர்த்தமானன் பதிப்பகம்,
எண்:21, ராமகிருஷ்ணா தெரு.
சென்னை -17
தொடர்புக்கு: 044 - 28144995