திரை விமர்சனம்: கோடை மழை

திரை விமர்சனம்: கோடை மழை
Updated on
2 min read

பாரம்பரியமான திருட்டுத் தொழில் மிச்சமிருக்கும் கிராமம் ஒன்றின் முகத் தைக் குறைவான ஒப்பனையுடன் நமக்குக் காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரவன்

பல தலைமுறைகளைப் பின் தொடர்ந்த திருட்டுத் தொழிலில் ஒரு சிலர் மட்டும் ஆர்வம் காட்டிவரும் கிராமம் அது. அங்கே நேர்மையாகவும் கவுரவமாகவும் வாழ்கின்றன பல குடும்பங்கள். அந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் உள்ளூர்வாசியான களஞ்சியம். அவரது தங்கையான ஸ்ரீப்ரியங் காவைக் கண்டதும் காதலிக்கிறார் ராணுவ வீரரான கண்ணன். விடுமுறையில் ஊருக்கு வந் தால் நண்பன் பொடுங்குதான் அவரது உலகம். பொடுங்குவோ கண்ணனுக்குத் தெரியாமல் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறான். ஒரு கட்டத்தில் பொடுங்குவின் முகத்திரை விலக, அவனை வெறுத்து ஒதுக்கி விடுகிறார் கண்ணன். கண்ணனின் காதலும் நட்பும் என்ன ஆகின்றன என்பது மீதிக் கதை.

இப்படியொரு கிராமம் இன் னும் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தாலும், அந்தக் கிராமத்தின் அன்றாட வாழ்வையும் அங்கே வாழும் மனிதர்களையும் பிரதி பலிக்கும் வகையில் பாத்திரங் களை வார்த்திருக்கிறார் இயக்கு நர் கதிரவன். காட்சிகளில் தென்மாவட்ட கிராமிய வாழ் வின் பழக்கவழக்கங்கள், சொல வடைகள் போன்றவற்றைச் சரி யான இடங்களில் பொருத்தி விடுகிறார்.

இயக்குநரே ஒளிப்பதிவாளராக வும் இருப்பதால் கதையினூடே கேமரா மிக நுட்பமாகப் பயணிக்கிறது. காட்சிகளில் விரியும் கிராமத்தின் வறட்சியும், அந்த வறட்சிக்குள் கவரும் கள்ளிக்காட்டின் பசுமையும் என கேமராவும் யதார்த்தமாகக் கதை சொல்கிறது.

ஒரே நேர்க்கோட்டில் சீராக நிகழும் அழுத்தமான சம்பவங் களுடன் திரைக்கதை பயணித் தாலும் அப்பட்டமான இடைச் செருகலாகத் துருத்தித் தெரியும் ‘டிராக் நகைச்சுவை’ அதன் வேகத்துக்குப் பெரும் தடை. கதை வேகமாக நகர வேண்டிய இறுதிக் கட்டத்தில் வரும் குத்துப்பாடலும் முட்டுக்கட்டை. இருப்பினும் கிளைமாக்ஸ் நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது.

நாயகனாக நடித்திருக்கும் கண்ணன் தனது கதாபாத்திரத்தில் இயல்பாகப் பொருந்திவிடுகிறார். யதார்த்தத்தை மீறாத ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது திறமை பளிச்சிடுகிறது. அண்ணனின் கலப்படமற்ற பாசம், காதலனின் பிடிவாதமான அன்பு இரண்டுக்கும் இடையில் அல்லாடும் கிராமத்துப் பெண்ணாக ப்ரியங்கா பளிச்சிடுகிறார். முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட காவல் ஆய்வாளராக இயக்குநர் களஞ் சியமும், நண்பனுக்குத் தெரி யாமலேயே தனது திருட்டுத் தொழிலுக்கு அவனைப் பயன் படுத்திவிட்டு நட்பை இழந்து நிற்கும் கதாபாத்திரத்தில் நடித் திருக்கும் கலை சேகரும் தரமான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவுக்கு அடுத்த நிலை யில் படத்தைக் காப்பாற்று வது சாம்பசிவத்தின் இசை. மண் வாசனையை மெட்டுக்களில் ஏற்றி, பாடல் வரிகளைச் சிதைக் காத வண்ணம் வாத்தியங்களைப் பயன்படுத்திக் கவர்ந்திருக்கிறார் இந்த அறிமுக இசையமைப்பாளர்.

யதார்த்தமான இந்தக் கதையில் பொழுதுபோக்குக்காகச் சேர்க்கப்பட்ட அம்சங்கள் சுவாரஸ்யமாக இல்லை என்பது தான் பிரச்சினை. இதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கொண்டாடப்பட வேண்டிய படமாக இருந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in