கோலிவுட் ஜங்ஷன்: சமந்தா தொடருக்கு எதிர்ப்பு! 

கோலிவுட் ஜங்ஷன்: சமந்தா தொடருக்கு எதிர்ப்பு! 
Updated on
1 min read

இணையத் தொடர்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வாடிக்கை. ஆனால், ‘தி பேமிலி மேன் 2’ தொடருக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வரும் ஜூன் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் இத்தொடரின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், இலங்கை இனப் பிரச்சினையும் அதையொட்டிய விடுதலைப் போராட்டமும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறி, தொடரை தடை செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இத்தொடரில் கறுப்பு மேக்-அப் போட்டுக்கொண்டு ஆயுதமேந்திய பெண் போராளி வேடத்தில் நடித்திருக்கிறார் சமந்தா.

வயதுகேற்ற கதைத் தேடல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்டதை அறிவித்துவிட்டார். முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய ரஜினி, அங்கே காத்திருந்த செய்தியாளர்களிடம் ‘மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்' என நீண்ட இடைவெளிக்குப்பின் மினி பேட்டி கொடுத்தார். இவற்றைவிட சூடான செய்தி, ரஜினி, தற்போது தன் வயதுக்கேற்ற கதைகளை பிரபல எழுத்தாளர்களிடம் கேட்கத் தொடங்கியிருக்கிறார் என்பது. இதைப் பிரபல எழுத்தாளர் தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மீண்டும் கூட்டணி

அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவந்த 'ஜன கண மன' திரைப்படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வந்தது. கரோனாவால் தற்போது படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டனர். வெளிநாடு சென்று மீண்டும் படப்பிடிப்பு நடத்தலாம் என்கிற நிலை உருவாக பல மாதங்கள் பிடிக்கலாம். அதற்கு முன்னர், உள்நாட்டிலேயே ஒரு படத்தை எடுத்துவிட முடிவு செய்து, இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்கள்.சமந்தா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in