

சிறு வயது முதல் தான் பார்த்த படங்களின் தகவல்களைக் குறிப்பெடுத்து வந்த ஒரு பழக்கத்தால் ஒரு கட்டத்தில் அத்தகவல்களே ஒரு பெரிய ஆய்வு நூலாக வரும் அளவுக்குச் சேர்ந்துவிட்டன. இப்படித்தான் ‘வெள்ளித் திரையில் அள்ளிய புதையல்’ என்ற தனது நூலைப் படைத்திருக்கிறார் கவிஞர் பொன்.செல்லமுத்து.
வானொலியில் பாடல் கேட்ட நாள் முதலே தகவல்களைத் திரட்டிவந்த காரணத்தால் 540 பக்கங்களுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்நூலை உருவாக்கும் அளவுக்கு விதவிதமான தகவல்கள் அவருக்குக் கிட்டியிருக்கின்றன. ஆகவே அவற்றைப் பல்வேறு தலைப்புகளில் தொகுத்திருக்கிறார். கிட்டத்தட்ட தமிழ்த் திரைப்படங்கள், பாடல்கள் தொடர்பான தகவல்களை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்துவிட்டார். திரைப்பட ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர் களுக்கும் பயன்தரக்கூடிய நூல் இது. ஏனெனில் இந்நூலில் அடங்கியிருக்கும் பலவகையான பட்டியல்கள் சினிமா ரசிகருக்கு பயன்பட வழியில்லை ஆனால் வாசிக்கும்போது சுவைதரக் கூடும்.
வெள்ளித் திரையில் அள்ளிய புதையல்
கவிஞர் பொன்.செல்லமுத்து
மணிவாசகர் பதிப்பகம்
சென்னை - 600108
தொலைபேசி: 044-25361039