கோடம்பாக்கம் சந்திப்பு: பயிற்சி எடுக்கும் நாயகி!

கோடம்பாக்கம் சந்திப்பு: பயிற்சி எடுக்கும் நாயகி!
Updated on
1 min read

விதவிதமான தனது ஒளிப்படங்களை சமூக வலைதளங்களில் குவித்து தன்னை பிரபலப்படுத்திக்கொள்வதில் ‘அடேங்கப்பா!’ சொல்ல வைப்பவர் யாஷிகா ஆனந்த். ‘துருவங்கள் பதினாறு’ தொடங்கிப் பல படங்களில் நடித்திருக்கும் இவர், முதல்முறையாக ‘சல்பர்’ என்கிற பெண் மையப் படத்தில் நடிக்கிறார். இதில் காவல் அதிகாரி வேடம். புவன் என்பவர் இயக்கும் இப்படத்துக்காக போலீஸ் பயிற்சி அளவுக்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறாராம்.

தொடங்கியது ‘அந்தகன்’

இந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற 'அந்தாதுன்' படத்தின் தமிழ் மறுஆக்க உரிமையை வாங்கியிருந்தார் நடிகர், இயக்குநர் தியாகராஜன். பிரசாந்த் நாயகனாக நடிக்க, அந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது தியாகராஜனே இயக்குநராகக் களமிறங்கி, படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். ‘அந்தாதுன்’ தலைப்பின் சாயல் தமிழிலும் இடம்பெற வேண்டும் என்று எண்ணி, மறுஆக்கத்துக்கு ‘அந்தகன்’ என்று தலைப்புச் சூட்டியிருக்கிறார்கள்.

மீண்டும் இணைந்த ஜோடி!

‘கோப்ரா' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்புக்காக தற்போது ரஷ்யாவில் இருக்கிறார் விக்ரம். அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் சிம்ரன். ஏற்கெனவே கௌதம் மேனன் இயக்கத்தில் இன்னும் முழுமைபெறாமல் இருக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடி சிம்ரன்தான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in