

மேடைப் பேச்சு என்பதே அருகிவரும் சூழலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா குறித்த கவிஞர் நந்தலாலாவின் உரையினை வீடியோ குறுந்தகடாக தந்திருக்கிறார்கள் தஞ்சை வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையத்தினர்.
‘கரகரப்பாய் ஒரு கலகக் குரல்’ எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த டி.வி.டியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நந்தலாலாவின் ஒரு மணிநேர உரையைக் கேட்பவருக்கு எம்.ஆர்.ராதா எனும் மகத்தான கலைஞனைப் பற்றிய செறிவான அறிமுகம் கிடைத்துவிடும்.
எம்.ஆர். ராதா என்பவர் வெறும் சினிமா கலைஞராக மட்டுமில்லாமல், ஆற்றல் மிகுந்த சீர்திருத்தவாதியாகவும் எப்படி தன்னை கட்டமைத்துக் கொண்டார் என்பதை அவரது வாழ்வியல் சம்பவங்களினூடே விவரிக்கும் நந்தலாலா நம்மையும் அந்தக் காலகட்டத்தில் சஞ்சரிக்க வைத்துவிடுகிறார்.
எம்.ஆர்.ராதா எனும் கலகக்கார கலைஞரை ஒலி வடிவில் இளைய தலைமுறையினர் கேட்டறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இக்குறுந் தகடு முதல்முறைக் கேட்கும்போதே நம்மை ஈர்த்துவிடுகிறது.
கரகரப்பாய் ஒரு கலகக் குரல் - டி.வி.டி குறுந்தகடு
விலை:ரூ.90/-
வெளியீடு: வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்,
MIG-36 மருதம், புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு,
புதுக்கோட்டைச் சாலை,
தஞ்சை 613005.
தொடர்புக்கு:7373036060.