Published : 18 Sep 2020 09:46 am

Updated : 18 Sep 2020 09:46 am

 

Published : 18 Sep 2020 09:46 AM
Last Updated : 18 Sep 2020 09:46 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: ரஜினிக்கு பதிலாக கமல்!

kodambakkam-junction

ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் 50-வது படத்தில் ரஜினி நடிக்க ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனக் கூறப்பட்டது. ஆனால், ரஜினி நடித்துவந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு கரோனா காரணமாக அப்படியே நிற்கும்போது, ராஜ்கமல் படத்தில் ரஜினி உடனடியாக நடிக்க இயலாது என்ற நிலை. இதனால் ரஜினியை இயக்கவிருந்த லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் 232 படத்தை இயக்குகிறார். இசை அனிருத்.

செருப்பு ஒன்று விருது மூன்று

ஆஸ்கர் அகாடமி விருதுக் குழுவின் விமர்சகர்கள் தொடங்கி, கடைக்கோடி ரசிகர்கள்வரை பல தரப்பினரின் பாராட்டுகளையும் அள்ளியது, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம். இது தற்போது நடந்துமுடிந்துள்ள டொரண்டோ தமிழ்த் திரைப்பட விழாவில், ஜூரி விருதான சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த தனி நடிப்பு என மூன்று விருதுகளை வென்றுள்ளது.

சூர்யாவைத் தொடர்ந்து...

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கும் மாஸ் கதாநாயகர்களில் ஒருவர் விஷால். தற்போது ‘சக்ரா’ படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். “இன்னும் சில நாள்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியிருக்கும் ‘சக்ரா’ படத்தை விரைந்து முடித்து, வரும் தீபாவளிக்கு ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யவிருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார் விஷால்.


கோடம்பாக்கம் சந்திப்புKodambakkam Junctionராஜ்கமல் நிறுவனம்ரஜினிஇயக்குநர் லோகேஷ் கனகராஜ்அண்ணாத்தகமல்செருப்பு ஒன்றுஒத்த செருப்பு சைஸ் 7சூர்யா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author