Published : 14 Aug 2020 09:06 am

Updated : 14 Aug 2020 09:06 am

 

Published : 14 Aug 2020 09:06 AM
Last Updated : 14 Aug 2020 09:06 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: தெலுங்கில் தீவிரம்

kodambakkam-junction

தமிழைவிடத் தெலுங்கில் பிஸியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ‘மகாநடி’ படத்துக்குப் பின் அங்கு மாஸ் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அதேநேரம், பெண் மையப் படங்களிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். அவற்றில் நாகேஷ் குக்நூர் இயக்கத்தில் ‘குட்லக் ஷக்தி’ என்ற விளையாட்டுத் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். ஆந்திர சினிமாவின் வசூல் நட்சத்திரமான மகேஷ் பாபு நடிக்கும் ‘சர்காரு வாரி பட்டா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இசையின் விளிம்பில்...


கரோனா ஊரடங்கு காலத்தில் தனக்குள் இருக்கும் இசையமைப்பாளருக்கு வேலை கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவரது இசையமைப்பில் ஆகஸ்ட் 7 அன்று இணையத்தில் வெளியான தனியிசைப் பாடலான ‘எட்ஜ்’, பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் அவருக்குப் பாராட்டுகளையும் குவிக்கிறது. ஆங்கிலத்தில் அமைந்துள்ள இந்தப் பாடலை அவரே பாடவும் செய்திருக்கிறார். அடுத்த ஆண்டு இவர் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஆல்பத்தின் முதல் பாடல் இதுவெனக் கூறியிருக்கிறார்.

ஊரடங்கிலும் ஒப்பந்தம்

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்து ராஜ்கமல் நிறுவனத்துக்காக படம் இயக்க இருக்கிறார். அந்தப் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜ்கமல் நிறுவனத்துக்கான படத்துக்குப் பிறகு தங்களுக்கு ஒரு படம் இயக்கும்படி தெலுங்குத் திரையுலகின் பிரபலமான பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறதாம்.


கோடம்பாக்கம் சந்திப்புதெலுங்கில் தீவிரம்கீர்த்தி சுரேஷ்மகாநடிஇசைஊரடங்குகரோனா ஊரடங்குகரோனா காலம்ஸ்ருதிஹாசன்மாஸ்டர்லோகேஷ் கனகராஜ்Kodambakkam Junction

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author