கோடம்பாக்கம் சந்திப்பு: விஷ்ணு விஷால் அடுத்து...

கோடம்பாக்கம் சந்திப்பு: விஷ்ணு விஷால் அடுத்து...
Updated on
1 min read

கரோனா மிரட்டலுக்குப் பயப்படாமல் புதுப்பட அறிவிப்புகள், ட்ரைலர்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. அவற்றில் முதலாவது அறிவிப்பு விஷ்ணு விஷாலிடமிருந்து வந்துள்ளது. ‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து இவர் நடிக்கும் படத்துக்கு ‘மோகன்தாஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இந்தப் படத்தை இயக்குகிறார்.

திரைக்கதை வழியாக...

‘ஜீவி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மிகவும் பேசப்பட்டது. அந்தப் படத்தின் கதாசிரியர் பாபு தமிழ் ‘க்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தர்மராஜ் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில் நவீன் தயாரிக்கும் இந்தப் படத்தில் குரு.சோமசுந்தரம், யோகேஷ் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அசரவைக்கும் ட்ரைலர்!

அடுத்தடுத்து விஜயை இயக்கிவந்த இயக்குநர் அட்லி இரண்டாவதாகத் தயாரித்திருக்கும் படம் ‘அந்தகாரம்’. ‘காரிருள்’ என்ற பொருள் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பைச் சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள். கூடவே தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான படத்தின் ட்ரைலருக்கும் வரவேற்பு குவிந்து வருகிறது.

விக்னராஜன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், பாலாவின் ‘நந்தா’ படத்தில் சிறு வயது சூர்யாவாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் எனப் பலர் நடித்திருக்கும் திரில்லர் படம் இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in