சமூக வலை: ‘சிரிப்பூட்டும் கரோனா வைரஸ்’

சமூக வலை: ‘சிரிப்பூட்டும் கரோனா வைரஸ்’
Updated on
1 min read

ரசிகா

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012-ல்வெளியான படம் ‘3’. இன்று முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அந்தப் படத்தின் மூலமே இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மேலும், அப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் தேச எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் வைரலானது. பல நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தப் பாடலின் பல்வேறு மீள் உருவாக்கப் பிரதிகளை இணையத்தில் வெளியிட்டனர்.

இன்னும் பலர் இந்தப் பாடலை வைத்து நடனமாட, அவையும் பிரபலமாயின. உலகமெங்கும் வேறு எந்தவொரு தமிழ்ப் பாடலும் இவ்வளவு பரவலான கவனத்தையும் புகழையும் ஈட்டவில்லை என்ற நிலையை ‘ஒய் திஸ் கொலவெறி’ அடைந்தது.

தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடலுக்கான தேவையை மீட்டுக்கொடுத்திருக்கிறது கரோனா வைரஸ். இந்தப் பாடலின் மெட்டையும் வரிகளையும் அப்படியே கரோனா வைரஸைப் பகடி செய்யும் விதமாக மாற்றிப் பாடி, தன் நண்பர்களுடன் இணைந்து இசையமைத்து அதை ட்விட்டரில் இசைக் கணொலியாக வெளியிட்டுள்ளார் ஜேமி லீவர்.

இவர், இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஜானி லீவருடைய மகள். மேடை நிகழ்ச்சிகளில் காமெடி செய்து மிகவும் பிரபலமானவர் ஜேமி லீவர் இருமியபடியே பாடலைப் பாடத் தொடங்க, அவரது நண்பர்கள் குழு தாளம் இசைக்கத் தொடங்குகின்றனர்.

கரோனா வைரஸ் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் நக்கலும் நையாண்டியும் தெறிக்கும் வரிகள் கரோனா அச்சம் போக்கி காண்போருக்குச் சிரிப்பூட்டுகின்றன. இந்தப் பாடல் தற்போது ட்விட்டரில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in