Published : 31 Jan 2020 12:33 PM
Last Updated : 31 Jan 2020 12:33 PM

திரை நூலகம்: தினசரி 4 காட்சிகள்

தமிழ் திசை - இந்து டாக்கீஸில், வாசகசாலை அமைப்பின் வலைத்தளத்தில் வெளிவந்த திரைக் கட்டுரைகளின் தொகுப்பே, டோட்டோ எழுதிய “தினசரி 4 காட்சிகள்” புத்தகம். தன் அறிமுகத்தில் இந்த வினோதப் புனைபெயரின் பின்னணியையும்சொல்லிவிடுகிறார்.

சிறுவயது தொடங்கி தற்காலம் வரைக்கும் திரைப்படங்கள் பார்த்த அனுபவத்தை முதல் கட்டுரையாக வைத்ததில் கட்டுரையாளரின் திரைரசனை மற்றும் வீச்சை புரிய வைத்துவிடுவதுடன் நம்மைப் போலவே இவரும் ஒரு ரசிகன் என்னும் நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்.

மேலும், திரைப்படங்களின் பகடி, டான் பாத்திரப்படைப்பு படமாக்கப்பட்ட விதங்கள், கால்பந்தாட்ட சினிமா, சிறு கதாபாத்திரங்கள், மாற்று வரலாற்றுத் திரைப்படங்கள் என ஒரு வகையாகவும் திரையாளுமைகள் பற்றிய பரவலாக வெளியில் அறியப்படாத பக்கங்கள் என இன்னொரு வகையாகவும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

பாசாங்கில்லாத - தோழமையான நேரடி மொழி, அந்தந்த மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களின் கதாபாத்திரப் பெயர்கள் கொண்டு சொல்லப்படுவது, கவித்துவமான தலைப்புகள், அறிந்த பெயர்கள் அறியாத தகவல்கள், மொழி கடந்த திரைப்பட ரசனை ஆகியவற்றை நிறைகளாகவும் வெவ்வேறு அளவு கட்டுரைகள், அவசரத்தில் செல்லும் இளையராஜா பற்றிய கட்டுரை, பொருளடக்கம் இல்லாதது, சிறு மொழிப்பிழைகள் ஆகியவற்றைக் குறைகளாகவும் கொள்ளலாம். ஆனால் சினிமா ரசனைக்கு உரமிடும் கட்டுரைகள்

தினசரி 4 காட்சிகள்
(கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர் : டோட்டோ
வெளியீடு : வாசகசாலை பதிப்பகம்
தொடர்புக்கு : 99426 33833 / 9790443979
மின்னஞ்சல் : vasagasalai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x